கொரோனா தொற்றினால் நேற்றும் மூவர் உயிரிழப்பு !

Thursday, November 19th, 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் இரு ஆண்கள் வீட்டிலும் மற்றொரு பெண் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி கந்தானையைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts: