கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Friday, April 28th, 2023இலங்கையில் கொரோனாவினால் 3 ஆயிரத்து 634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில் 2 ஆயிரத்து 225 ஆண்களும் ஆயிரத்து 409 பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் இன அடிப்படையில் 2 ஆயிரத்து 992 இஸ்லாமியர்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள் 85 கத்தோலிக்கர்கள் இதில் அடங்குவதாக கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தனியார் வைத்திய கல்லூரிகள் நாட்டுக்கு தேவை! உயர்கல்வி அமைச்சர்
கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டெழுந்து வருகின்றது – நோய் அறிகுறியுடன் மேலும் 108 பொது மக்...
கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு!
|
|