கொரோனா தொற்றினால் உலகளவில் 1 கோடியே 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 5 இலட்சத்து 4 ஆயிரத்திற்கும் அதிகமானோம் பலி!

Monday, June 29th, 2020

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 இலட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் அண்மைய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 5 இலட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, 55 இலட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு 26 இலட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

Related posts: