கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல் !

Saturday, June 20th, 2020

நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. அவர்களில் இரண்டு பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர். ஒருவர் மும்பையிலிருந்த வந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 இனால் பீடிக்கப்பட்டிருந்த 25 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்த 446 ஆக அதிகரித்துள்ளது. 493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொவிட்-19 இனால் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில்  சிக்கியிருந்த 194 பேர் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் சென்னை மற்றும் மும்பாயில் இருந்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக விமான நிலையத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts: