கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
Saturday, April 25th, 2020தற்போது நாட்டில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலை உருவாகியுள்ளது. எனினும் அந்த நிலைமையை கண்டு மக்கள் பதற்றமடைய தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பி;சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளர்களை அதிக அளவில் இனங்காண முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
அத்துடன் ஆரம்ப கட்டத்தில் மிகவும் குறைந்தளவான பி.சி.ஆர். சோதனைகளே மேற்கொள்ளப்பட்டன. கடந்த வாரமளவில் அது 531 ஆக அதிகரிக்கப்பட்டதோடு, இவ்வாரம் அதனை 730ஆக அதிகரித்துள்ளோம். ஒரு சில ஆய்வுக்கூடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை மேலும் அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, சுகாதார அமைச்சால் தேசிய ரீதியில் வழங்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு அவர்களின் உதவியைப் பெறுவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கையில் மிக உயர்ந்த அளவில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நோக்கமாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|