கொரோனா தொற்றால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்!

Wednesday, November 25th, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக சென்றிருந்த 198 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 143 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். மேலும் மாலைத்தீவில் இருந்து 53 பேரும் கட்டாரில் இருந்து 2 பேரும் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: