கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மரணம் பதிவு!

Tuesday, March 16th, 2021

யாழ்.மாவட்டத்தில் 3ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் வசிக்கும் 75 வயதான பெண் ஒருவர் நிமோனியா நிலைக்கு சென்ற நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் தீவிர சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் யாழ்.கோப்பயன்மணல் மயானத்தில் மின் அணு தகனம் செய்யப்பட்டிருதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: