கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுறுதி!

கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 61 பேர் உயிரிழந்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந் தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறுதியாக மரணித்த 61 பேரில் 25 பெண்களும் 36 ஆண்களும் அடங்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 150 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 118ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கூவில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்!
A/L பரீட்சை மீள்திருத்தம் தொடர்பான விண்ணப்ப இறுதி தினம் இன்று..!
|
|