கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!

Tuesday, December 1st, 2020

கொரோனாவினால் உயிரிழப்போரின் பூதவுடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரித்தி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டது. கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உயிரிழந்த முஸ்லிம்களின் உறவினர்கள் உள்ளிட்ட சிலரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: