கொரோனா தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!

Friday, March 13th, 2020

கொரோனா வைரஸ் குறித்து ஏற்பட்டுள்ள பீதியை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், நன்கு சிந்திக்கப்பட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இதன்படி, அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், நாட்டு மக்கள் மற்றும் தேசத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களின் செயல்முறைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையினால், நாட்டு மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் வதந்திகள் மற்றும் போலி செய்திகளைப் நம்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் குறித்த பீதி காரணமாக இன்று மாலை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் சன நெரிசல் காணமுடிந்தது.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் செரிசலாக நின்று தேவைக்கும் அதிகமாகவே எரிபொருளை பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: