கொரோனா தாண்டவம் : காவுகொள்ளப்பட்ட ஆறு மாத பச்சிளம் குழந்தை – அமெரிக்காவில் உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை தாண்டியது!

Thursday, April 2nd, 2020

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை அமெரிக்காவில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நியூயோர்க் நகரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கொரோனா வைரஸ் தொற்றிய ஆயிரத்து 300 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 884 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றியதன காரணமாக பிறந்து ஆறு வாரங்கள் ஆன பச்சிளம் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்ட மிகவும் குறைந்த வயதான மரணம் இது என கருத்தப்படுகிறது.

இதனிடையே புளோரிடா, ஜோர்ஜியா, மிசிசிப்பி ஆகியன மாகாணங்களை மூடுமாறு புதிதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றிய 2 இலட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.

Related posts: