கொரோனா தடுப்பூசி தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறியது! தயக்கமின்றி அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Monday, February 1st, 2021

தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பம் வருகின்ற போது தயக்கமின்றி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் சுகாதார அதிகாரிகள் மற்றும் படையினருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இது தொடர்பில் தனது முகநூல் மேலும் அவர் குறிப்பிடுகையில் –

பலர் தடுப்பூசி போட்டுவிட்டார்கள். இரண்டு நாட்கள் கடந்து விட்டன. காய்ச்சல் தலையிடி ஏதும் எனக்கு வரவில்லை. நேற்று ஊசி ஏற்றிய பகுதியில் சிறிய வீக்கமும் ஏற்பட்டதை தவிர வேறு ஒன்றுமில்லை.

சிலருக்கு காய்ச்சல் வந்ததாக அறிகின்றேன். சிறிய குழந்தைகளுக்கு ஏனைய தடுப்பூசி போடுகின்ற போது இவ்வாறு காய்ச்சல் ஏற்படுவது வழமை. ஆகவே இதை சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் விரைவில் உங்களுக்கு தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பம் வருகின்ற போது தயக்கமின்றி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: