கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து 4,700 பிசிஆர் கருவிகள் இலங்கைக்கு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4 ஆயிரத்து 700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
பசுபிக் ஒக்மெண்டேஷன் அணியின் பணிப்பாளர் பிரட் லீடர் மற்றும் சிவில் ராணுவ துணை பிரிவின் பணிப்பாளர் டோனி ஷூ ஆகியோர் இந்த பிசிஆர் கருவிகளை இராஜாங்க அமைச்சர்களான சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோரிடம் வழங்கினார். இதுதொர்பான நிகழ்வு நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீனியின் விலை அதிகரிக்காது - நிதி அமைச்சு!
அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் வீட்டுப் பணிப்பெண்களின் ஆகக்குறைந்த வயதெல்லையில் திருத்தம்!
|
|