கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவிப்பு?

கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து விலகவுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்துளதாகவும் இது தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
அந்த செய்தியில் மேலும் –
கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளின் போது மேலதிக சலுகைகளை எதிர்பாராது பணியாற்றி வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும், கொரோனா வைரஸுக்கு எதிரான பணிகளின் போது, பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்களும் ஆபத்தில் இருப்பதாகவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், பொது சுகாதார ஆய்வாளர்களின் முயற்சிகளை சுகாதார அதிகாரிகள் அங்கீகரிக்க தவறியமை குறித்து தொழிற்சங்கம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
COVID-19 தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் தொழிற்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது போனால் எதிர்வரும் 4ம் திகதி முதல் கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
Related posts:
|
|