கொரோனா சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020

கொரோனா நோய்க்கான சிகிச்சை முறை எதற்கும் தாம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் சுகாதார நெருக்கடிகள் திட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆய்வுக்கூட பரிசோதனையில் (clinical trials) ஏராளமான சிகிச்சை முறைகள் இருப்பதாகவும், இதில் எந்த சிகிச்சை முறைக்கும் உலக சுகாதார அமைப்பு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகளுக்காக உலக சுகாதார அமைப்பு காத்திருப்பதாகவும், அதன்பிறகே எந்த சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளிப்பதென முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

Related posts: