கொரோனா கோரத் தாண்டவம்: ஒரே நாளில் 1355 பேர் மரணம்- பிரான்ஸில் பெரும் சோகம்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒருநாளில் உயிரிழந்தவர்களின் அதிகபடியாக எண்ணிக்கை இதுவென கவலை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 509 மரணங்கள் பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
பிரான்ஸில் வைரஸ் தாக்கம் காரணமாக 59 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 400 பேர் பூரண குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 387. ஆபத்தான நிலையில் 6 ஆயிரத்து 399 பேர் உள்ளனர்.
இதேவேளை உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
சம்பூர் மக்களின் உணர்வுகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
யாழ் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!
வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் - தேர்தல் ஆணைக்குழு!
|
|