கொரோனா கோரத் தாண்டவம் : அலறுகின்றன வல்லாதிக்க தேசங்கள் : யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம்!

Sunday, March 29th, 2020

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு ஜனாதிபதி டொனாலட் டிரம்ப்.

அமெரிக்க வரலாற்றிலேயே கையெழுத்தான மிகப் பெரிய நிவாரண நிதி இதுதான் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இருந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஜனாதிபதி டிரம்ப் இரு கட்சியினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

உலகில் எந்த நாட்டை விடவும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா.

இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் இவ் ஆண்டு பெப்ரவரி 27 இல் 60 நோயாளிகள் இந் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அடுத்து 3 வாரங்களுக்கு பின்னர், மார்ச் 3 இல் இலங்கையைப் போல அவர்களும் 100 நோயாளிகள் தானே என்று சாதாரணமாக இருந்துவிட்டார்கள். ஆனால் சரியாக ஒரு மாதம் மார்ச் 27 இல் அமெரிக்காவில் 85,268 நோயாளிகளுடன் 1,293 இறப்புக்கள்  என பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நோய்க்குள்ளானவர்களின் பராமரிப்புக்கென அமெரிக்காவுக்கு 30,000 செயற்கைச் சுவாச இயந்திரங்கள் தேவைப் படுகின்றன. உலகின் மிகப்பெருமத் வல்லரசான அமெரிக்காவே இன்று நோயை கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் ஆட்டம் கண்டுள்ளது.

கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக இருந்தாலும், அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது இத்தாலி தான்.

இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றால் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அதுமட்டுமல்லாது கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 50 மருத்துவர்கள் இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலி ஏற்கனவே இரண்டு வார காலமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தாலியின் வடக்கு பகுதியே இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தெற்கு இத்தாலியும் அவ்வாறு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலகளவில் உயிர் காக்கும் உபகரணங்கள் குறைவாக இருப்பது, பலரையும் காப்பாற்ற முடியாமல், அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் இலங்கையில் இந்நோக்கு இலக்காகி 115 போர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாது 10 நோயாளர்கள் குணமாகி வெளியேறியுள்ள நிலையில் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என் சந்தேனகத்தில் 117 போர்  உள்ளதாகவும் ஐ.டி.ஏச்.மருத்துவமனை கூறுகின்றது.

இவ்வாறான ஒரு அபாய நிலையில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் அமெரிக்கா அல்லது இத்தாலி போன்ற உருவானால் நிலைமை என்னவாகும் என்பதே இன்று எமது மக்களிடையே எழுந்துள்ள கேள்வி.

அதுமட்டுமல்லாது இந்த நோயை கட்டுப்படுத்துவதில் எமது மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் ஒரே ஒரு வளமாக உள்ள யாழ் போதனா வைத்தியசாலையில் இருப்பதோ குறைந்தளவான வளங்களே. அதுமட்டுமல்லாது 25 முதல் 30 வரையான செயற்கைச் சுவாச இயந்திரங்களே  இங்கு உள்ளன.

அந்தவகையில் எமக்கும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவ துறையால் எச்சரிக்கப்படும் நிலையில் அரசின் உத்தரவுகளை மதித்து ஊரடங்குச் சட்டத்தை மதித்து வீடுகளில் மக்கள் இருக்க வேண்டியது காலத்தின கட்டாயமானது.

Related posts: