கொரோனா கால பொது போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டத்தை கடுமையாக அமுலாக்க பொலிஸார் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கொவிட் சட்டங்களை மீறி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள், நடத்துநர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய பேருந்தொன்றில் ஏற்றிச் செல்லக் கூடிய பயணிகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான விசேட சோதனை நடவடிக்கை இன்றுமுதல் (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு - குற்றம் சாட்டும் அதிகாரிகள்!
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல் அவசியம் - சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக...
|
|