கொரோனா என்னும் தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் – தீபவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தாதுவர் நடராஜன் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020

தேனினுமினிய செந்தமிழ் பேசும் இலங்கை தமிழ் உறவுகளுக்கும் புலம்பெயர் நாடுகளிலெல்லாம் தமிழ் புகழ் பரப்பும் அன்பான புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தீபாவளி திருநாள் குறித்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பிவைத்தள் வாழ்த்துக் குறிப்பில் –

நீண்டகாலத்தின் பின்னர் உங்களுக்கான எனது வாழ்த்துக்களை தாங்கிவந்திருக்கும் செய்தி பத்திரிகை ஆசிரியபீடத்திற்கும் உத்தியோகத்தர்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்கு பலவிதமான கதைகளும் காரணங்களும் கூறப்படுகின்றன. குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு எத்தனை கதைகள் கூறப்பட்டாலும்  அவையனத்தினதும் சாரம்சமாக தீயவற்றை ஒழித்து நல்லவற்றை வழங்கும் ஒரு பெருநாளாகவே கொள்ளல் சிறப்பு.   இன்றையநாளில் அதுவும் குறிப்பாக 2020 மார்ச் மாதத்தில் இருந்து இன்றுவரை உலகை அச்சுறுத்தும் கொரன்னா எனப்படும் தீநுண் மீதாக்கத்தால் மக்கள்படும் இன்னல்களை அன்றைய நாளில் நரகாசுரனால் மக்கள் அடைந்த துன்பத்திற்கு ஈடாக ஒப்பிடலாம். கொரோனாஎ னும்கொடிய அரக்கனை இந்த தீபாவளி நாளில் அழித்து மக்களை இன்னல்களிலிருந்து காத்தருள் செய்ய இறைவனை வேண்டுகிறேன் .

அன்பு உறவுகளே! இன்றைய நாளில் தீபாவளி பண்டிகையை உங்களது வீடுகளுக்குள்ளே இருந்து அமைதியாக கொண்டாடுங்கள். உங்களது உறவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா எனும் அரக்கன் மக்களை அழிப்பதற்கு விழிப்பாக இருக்கிறது. இன்றைய நாளில் கொரன்னா எனும் அரக்கன் அழிந்துபோகட்டும் என இறைவனை வேண்டுங்கள். இன்றைய  தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் என்கின்ற நம்பிக்கையுடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: