கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!

Friday, April 3rd, 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 93 ஆயிரம் பேரும், நியூயார்க்கில் 16 ஆயிரம் பேரும் இறக்கக்கூடும் என நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவால் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ தனியார் நிறுவனம் ஒன்றின் தரவைக் குறிப்பிட்டு பிற மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,

தனியார் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி கொரோனா முற்றிலுமாக நீங்குவதற்குள் அமெரிக்காவில் 93,000 பேர் வரை பலியாகலாம். நியூயார்க்கில் 16,000 பேர் இறக்கலாம். புதன்கிழமை மட்டும் நியூயார்க்கில் சுமார் 7,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: