கொரோனா அச்சுறுத்தல் – நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Friday, April 30th, 2021

கொரோனா பரவல் காரணமாக அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முன்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில், இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதத்தையும், வாக்கெடுப்பையும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: