கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டது !

Monday, April 19th, 2021

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள் சிலர் கொவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்றையதினம்முதல் மறு அறிவித்தல் வரையில் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நோக்கில் இவ்வாறு உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டுள்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் அவசர தேவைகளுக்காக +91-11-23010201 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றுமுதல் டெல்லியில் முடக்க நிலையை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: