கொரோனா அச்சுறுத்தல்: ஆபத்து மிக்க பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020

இலங்கையில் கம்பஹா மாவட்டத்துக்கு அடுத்தப்படியாக கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதி ஆபத்து பிரதேசமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற அளவில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஷேனல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது நாளொன்றுக்கு 6 ஆயிரம் பீ.சீ.ஆர் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இது போதுமானதல்ல.

நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை முறை மேம்படுத்தப்படவேண்டும். சரியான பரிசோதனை கொள்கை அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்ட உடனேயே சுகாதார அதிகாரிகள் தகவல்களை வெளியிடவேண்டும் என்றும் வைத்திய கலாநிதி ஷேனல் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித வலு, பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை அரசாங்கம் கருத்திற்கொண்டு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வத...
கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி - இராஜாங்க அமைச்சர்...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் - முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங...