கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – மறு அறிவித்தல் வரை தபால் விநியோக சேவை நிறுத்தம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!
Monday, October 26th, 2020நாட்டில் கொரோனா தொற்று விரிவடைந்து வருவதையடுத்து அப்பகுதிகளுக்கான தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் மூலம் கடிதங்கள் விநியோகிக்கப்படுவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை அடுத்து, பல பகுதிகளில் உள்ள மக்கள் கடிதங்கள் மற்றும் பொதிகளை ஏற்க மறுத்து வருவதாகவும், தபால் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேற்கு மாகாணம், காலி பிரதான தபால் அலுவலகம் மற்றும் அதன் கீழுள்ள உப அலுவலகம், குளியாபிட்டிய மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள புறநகர் தபால் அலுவலகங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் ஆகியவற்றின் கடித விநியோகிக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தபாலகங்களுக்காக அனுப்பப்படும் கடிதங்களும் நாட்டின் பிற அலுவலகங்களிலிருந்து கடிதங்கள் பெறுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மத்திய அஞ்சல் பரிமாற்றசேவை மற்றும் தபால் அலுவலகம் வெளி வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவீத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|