கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவிக்கும் உலக நாடுகள்!

Friday, April 24th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் தொகை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாட்டும்  இதுவரை 50 ஆயிரத்து 243 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அங்டகு இதுவரை 8 இலட்சத்து 86 ஆயிரத்து 709 பேர் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

இதேநேரம் ஸ்பெயினில் கொவிட் 19 தொற்றில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 22 ஆயிரத்து 157 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் இத்தாலியில் 1 இலட்சத்து 89 ஆயிரத்து 973 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, 25 ஆயிரத்து 549 பேர் பலியாகியுள்ளனர்.

இதனை தவிர, 23 ஆயிரத்து 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் 19 தொற்றில் இந்தியாவில் இதுவரை 722 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இன்றையதினம் முதல் முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள பள்ளிவாயில்களில் அதி;களவானோர் ஒன்று கூடியதுடன் அவர்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது நெருக்கமாக அமர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொவிட் 19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 91 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இதுவரையில் 27 இலட்சத்து 26 ஆயிரத்து 752 ஆகவும் அதிகரித்துள்ளது.

எவ்வாறியினும், 7 இலட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts: