கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, March 1st, 2021

2020 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை கொரோனா தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சையை வெற்றிகரமாக ஆரம்பித்துள்தாக தெரிவித்துள்ள இலங்கை பரீட்சை திணைக்களம் அதற்கான அனைத்து சுகாதார ஏற்பாடுகளையும் இறுக்கமாக கடைப்பிடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இன்று ஆரம்பித்தள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 622,352 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், கறித்த பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பரீட்சை நிலையங்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு முழுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன் 542 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பரீட்சை ஆணையாளர் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இணைப்பு மத்திய நிலையங்கள் என 40 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அது தொடர்பில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இன்று ஆரம்பமாகியுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேருந்து சேவையை மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

முன்பதாக மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பரீட்சை நேர அட்டவணைகளுக்கு அமைவாக விசேட பேருந்து சேவை இடம்பெறுவதாகவும் போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரணப் பரீட்சையில். வடக்கு மாகாணத்தில் 44,245 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

குறித்த 44 245 மாணவர்களில் 23 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 566 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்.

இவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 11 352 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 11 130 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 22 482 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 392 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 74 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 5 466 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 919 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 1855 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4 774 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன் வவுனியா மாவட்டத்தில் 3 771 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 860 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 6 631 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றும் அதேவேளை

மன்னார் மாவட்டத்தில் 2 245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4 892 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: