கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த சுகாதார பாதுகாப்புகளுடன் நாளை நடைபெறுகின்றது புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நாளை (11) நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஆவர் மேலும் தெரிவிக்கையில் – இம்முறை புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள தொழி ஊடக 248,072 மாணவர்களும், தமிழ் மொழி ஊடாக 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ள என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|