கொரோனாவை கட்டுப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள் – நெடுங்கேணி மக்களிடம் சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கை!

Sunday, October 25th, 2020

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், குறித்த பகுதியில் கொரோனா சமூக தொற்றாக மாறாமல் இருப்பதற்காக அனைவரும் வர்த்தக நிலையங்களை பூட்டி பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதடினப்படையில் வவுனியா வடக்கின் னைநாமடு, ஒலுமடு, நெடுங்கணி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டி பிசீஆர் பரிசோதனைக்கு ஒத்துழைத்து சமூக பரவரை தடுக்க உதவுமாறு வவுனியா வடக்கு சுகாதார துறையினர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளனர்.

“மாகா” ஒப்பந்த தனியார் நிறுவனம் வழக்கிய ஒத்துழைப்பு காரணமாக சமூக பரவலை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார துறையினர், வர்த்தகர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாக தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: