கொரோனாவை அடுத்து நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, June 4th, 2020

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் ஆபாயம் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கடந்த மே மாதத்தில் மட்டும் டெங்கு நோயால் 920 பேரும் எலி காய்ச்சலால் 740 பேரும் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் டெங்கு காய்ச்சளினால் 19 ஆயிரத்து 940 பேரும் , எலி காய்ச்சலினால் 2,198 பேரும் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு , கம்பஹா , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினியை தெளிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் தீவிரமாக பரவி வரும் நிலையில்  டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: