கொரோனாவுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தோள் கொடுத்தது சுவிர்சலாந்து – அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, June 8th, 2021

கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக – முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களாகவும் – சுவிட்சலாந்து மக்களால் வழங்கப்பட்ட 80 கோடி ரூபாய்கள் பெறுமதியான நன்கொடை இன்று காலை இலங்கை வந்து சேர்ந்தது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலைலயில் நாம் சந்தித்திருக்கும் நெருக்கடி நிலைமையின் தன்மை அறிந்து உதவியிருக்கும் சுவிஸ் அரசாங்கத்திற்கும், அந்த நாட்டு மக்களுக்கும் – இலங்கை மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை ஜனாதபதி கோட்டபய ரரிபக்ச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உரிய பொழுதில் இந்த உதவி வந்து சேருவதை அனுசரணை செய்த சுவிஸ் தூதுவராலயத்திற்கும் ஜனாதிபதி தனது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: