கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவசரம் வேண்டாம் – வைத்தியர் ஹரித அலுத்கே!

Thursday, April 16th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் அவசரப்படக்கூடாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில் –

தடைகளை நீக்குவது தொடர்பிலான சாத்தியப்பாடுகள் குறித்து தற்போதைக்கு எதிர்வு கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக அளவில் நோய் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊடாக நாட்டுக்குள் நபர்கள் பிரவேசிப்பது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதுடன் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் புத்தாண்டு காலத்தில் இந்த வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு மக்கள் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் இதற்கு அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: