கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 240 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Friday, May 8th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 240ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்றையதினமும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 8 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இதுவரை 824 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  தற்போது வைத்தியசாலையில் 575 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 135 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ள அதேவேளை 9 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Related posts: