கொரோனாவின் மூன்றாவது அலை இராஜங்கனையில் பதிவாகியுள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அலுத்கே தெரிவிப்பு!
Friday, July 24th, 2020இராஜங்கனை பகுதியில் கொரோனாவின் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஹரித அலுத்கே மேலும் கூறியுள்ளதாவது – “கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாக்க இருந்த ஆபத்து வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் இராஜங்கனை பகுதியில் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் கொரோனா தொற்றாளர்களாக இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜங்கனை பகுதியில் இதுவரை சுமார் 8ஆயிரத்து 500பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|