கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து!

நாட்டை திட்டமிட்டமுறையில் திறந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழலில் அரசியல்வாதிகள் கொரோனா வைரசின் நான்காவது அலையை உருவாக்குவதை தவிர்க்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம் சுகாதார அதிகாரிகள் முன்வைத்துள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் பிரதிநிதிகளினதும் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போதைய நிலவரம் காரணமாக பொதுமக்கள் பெரும் சுமையை சுமக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் நாடு திறக்கப்படும் வரை அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உர நிவாரணத் தொகையை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யும் நடைமுறை ஆரம்பம்!
கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட காப்புறுதித...
சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|