கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!

Thursday, September 2nd, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கமைய கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த வாரத்தில் மாத்திரம் 194 பேர் வீடுகளில் உயிரிழந்தனர் என அந்தப் பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது. கடந்த 21ஆம் திகதிமுதல் 27ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 99 பெண்களும் 95 ஆண்களும் வீடுகளில் உயிரிழந்தனர். அத்துடன் இதுவரை ஆயிரத்து 94 பேர் வீடுகளில் உயிரிழந்தனர்.

மொத்த மரணங்களில் 13.1 வீதம் வீடுகளில் இடம்பெற்றுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: