கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு – புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 94 ஆயிரத்து 355 அதிகரித்துள்ளது.
அவர்களில் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 381 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 42 ஆயிரத்து 608 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 194 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 560ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!
சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
கிளிநொச்சி மாவட்டத்தில், நாட்டரிசி வகை நெல் மட்டுமே கொள்வனவு - அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரி...
|
|