கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர் – லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தகவல்!

Friday, August 27th, 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்களில் நால்வர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்பட்டதால் அவர்களுக்கு என இன்னுமொரு கட்டில் தொகுதியும் தயார்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆறு கட்டில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதிற்கு குறைவானவர்கள் முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் வரை 150 நோயாளிகளிறகு எங்களால் சிகிச்சை அளிக்க முடியும். அத்துடன் கொரோனா உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 நோயாளிகள் நாளாந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு வயதிற்கு உட்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கின்றோம், ஏனையவர்களை வீட்டு பராமரிப்பிற்கு அனுப்புகின்றோம், சிறிய அறிகுறிகள் உள்ள இரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களை இடைத்தங்கல் பராமரிப்பு நிலையங்களிற்கு அனுப்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: