கொரோனான தொற்று: சிகிச்சை பலனின்றி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் உயிரிழப்பு!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைமுதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதனை அடுத்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியை விலகுவதாக அவர் அறிவித்த போதும் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவ...
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு – தற்காலிக நெருக்கடி நிலையை இலங்கை விரைவில் வ...
|
|