கொன்சியூலர் விவகாரங்கள் அலுவலகம் வார நாட்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி திங்கள்முதல் வெள்ளிவரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: