கொத்தலாவல பல்கலைக்கு சைட்டம் மாணவர்கள் இணைப்பு!

Friday, February 23rd, 2018

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எடுக்கப்பட்டதாக ஜனாதிபதிஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் சுமார் 1000 மாணவர்களின் தகைமைகளைப் பரிசீலித்து அதற்கமைய கொத்தலாவல பாதுகாப்புக்கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: