கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் கல்விதுறைகளை விஸ்தரித்துள்ளது!

Monday, October 4th, 2021

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் உயிரியல் பொருட்கள், திசு பொறியியல், மறுசீரமைப்பு மருத்துவம், உணரிகள் மற்றும் உயிரியல் உணரிகள் மற்றும் அதனுடன் இணைந்த துறைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் கொம்சாட்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் அப்பல்கலைக்கழகத்தின் ரெக்டர் பேராசிரியர் டொக்டர் முஹம்மது டி. அப்சல் ஆகியோர் கைச்சாத்திட்டதாக கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: