கொட்டதெனியாவ பகுதியில் வெடிப்பு சம்பவம் – இந்திய பிரஜை உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்!

Sunday, January 3rd, 2021

கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தின்போது மேலும் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டதெனியாவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றின் கொதிகலனொன்று வெடித்துள்ளமை காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: