கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டது!

Friday, April 30th, 2021

யாழ்.கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்றுகாலை சுகாதார பிரிவினரால் சந்தை முடக்கப்பட்டிருப்பதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் பீ.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் சந்தையை மீளவும் திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என சுகாதார பிரிவனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: