கொடிகாமப் புகையிரதக் கடவையில் காவலாளி இல்லை- மக்கள் விசனம்!

Saturday, January 26th, 2019

கொடிகாமம் – நாவலடிப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் காவலாளி கடமையிலில்லை எனவும் பாரிய அனர்த்தம் நிகழ முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப் பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த புகையிரதக் கடவையில் அண்மைக்காலமாக காவலாளி கடமையில் இருப்பதில்லை. அதனால் புகையிரதம் வரும் வேளைகளிலும் கடவையில் தடுப்பு இருந்தும் கடவை மூடப்படுவதில்லை. குறித்த கடவை வளைவான பகுதியில் காணப்படுவதனால் புகையிரதம் வருவதை நொடிப்பொழுதில் தான் அவதானிக்க முடிகிறது.

அதேவேளை ஏற்கனவே இக் கடவையில் ஒரு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது. ஆகவே மீண்டும் பாரிய அனர்த்தம் நிகழ முன்னர் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts:


யாழ்.மாநகர சபைக்குரிய கட்டடத் தொகுதிகள் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டக்  கலந்துரையாடல்!
கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை - அரசாங்க மருத்துவ அதிக...
வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் புதிய தாழமுக்கம் - புயலாக மாறவும் வாய்ப்புள்ளதென யாழ். பல்கலைக்கழக...