கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரைக் காவுகொள்ளும் குறித்த பயங்கரமான வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.குறித்த எபோலா வைரஸ் தொற்று பரவி வருகின்றமை கொங்கோவில் உள்ள ஆய்வகமொன்றினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உலக சுகாதார அமைச்சிடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இந்த கொடூரமான எபோலா வைரஸ் தொற்றின் காரணமாக மேற்கு ஆபிரிக்காவில் சுமார் 11,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியா, சியேரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் குறித்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவியமை சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
|
|