கொக்கையின் கொண்டு வரப்பட்டமைக்கு சீனி வியாபாரிகளுக்கு தொடர்பில்லை!

Friday, December 9th, 2016

சீனி கொள்கலன்களில் கொக்கையின் கொண்டுவரப்பட்டமைக்கும் இலங்கையின் சீனி வியாபாரிகளுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லாத நிலையில நாற்பது ஆண்டுகள் வியாபாரத்தில் ஈடுபடும் சீனி வியாபாரிகள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால்  எமக்கு நியாயமான வகையில் தீர்வு கிடைக்கபெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சீனி இறக்குமதியாளர்களினால் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பு  கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையில் சீனி கொள்கலன்களில் இருந்து பெருந்தொகையான கொக்கையின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையில் மாத்திரம் நடைபெறும் ஒன்று அல்ல. சர்வதேச நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளன. சீனி கொண்டுவரப்பட்ட கொள்கலன்களில் இவ்வாறு கொக்கையின் அடைக்கப்பட்டிருந்தமையும் அல்லது யாருக்காக இங்கு வந்தது என்ற விபரமும் எமக்குத் தெரியாது. எனினும் இந்த சம்பவத்தை அடுத்து தற்போது இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சீனி கொல்கலங்களுக்கு அதி தீவிர பரிசோதனைகள் நடைபெறுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையில் நாற்பது ஆண்டுகள் வியாபாரத்தில் ஈடுபடும் சீனி வியாபாரிகள் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. அதேபோல் நாட்டில் சீனி வியாபாரிகளின் மீதுள்ள நம்பிக்கை மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

sugar-03

Related posts: