கொக்குவில் மஞ்சவனப்பகுதியில் வாள்வெட்டு சம்பவம்: அச்சத்தில் மக்கள்!

கொக்குவில் மஞ்சவனப்பகுதியில் இனந்தெரியாத குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்த பெறுமதிமிக்க உடமைகளைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் குறித்த பகுதியில் வாள்கள் பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மற்றும் பெறுமதி மிக்க உபகரணங்களை உடைத்து சேதமாக்கியதுடன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் வாள்களால் வெட்டி சேதமாக்கி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தமில் வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து வீட்டிலிருந்து ஓடி ஒளித்துக்கொண்டதன் காரணமாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் குறித்த சம்பவம் தொடர்டபில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|