கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!

Saturday, August 10th, 2019

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று வீட்டின் கதவு ஜன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொருக்கு கோடாரியால் கொத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டள்ளது.

இச்சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அரச உத்தியோகத்தரது வீட்டிலேயே நேற்று இரவு 9.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, குறித்த வீட்டின் கணவனும் மனைவியும் அரச உத்தியோகம் செய்து வருகின்றனர். இவர்கள் தமது வீட்டைப் பூட்டி விட்டு, வீட்டிற்குள் இருந்துள்ளனர்.

குறித்த வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று வீட்டின் மதிலால் பாய்ந்த வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு வீட்டின் முன்பக்க கதவையும் கொத்திவிட்டு மதில் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை, தாக்குதல் தாரிகள் தப்பியோடியும் தாக்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் பூட்டப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமாராவைக் கண்டதும் அதனையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: