கொக்குவில் பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் விசேட சோதனை நடவடிக்கை!
Friday, June 11th, 2021யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் குடாநாட்டில் பயணத் தடையை மீறி வீதிகளில் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண பொலிசாரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
Related posts:
எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களை வீடுகளிலிருந்து வெளியேற இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி அறிவித்த...
ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலைமுதல் நீக்கப்படுகின்றது மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு - இராணுவத் தள...
புதிய நேர அட்டவணையில் இயங்கும் நயினாதீவு - குறிகட்டுவான் படகு சேவை !
|
|