கொக்குவில் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் வாகனங்களுக்கு தீ வைப்பு !

யாழ்ப்பாணம் கோக்குவில் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வான் உட்பட மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து தப்பி ஓடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில் கருவேப்பிலை வீதியில் பகுதியில் இன்று (19) நண்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
8 பேர் கொண்ட குழுவினர் வீட்டிற்கு சென்றுள்ளதுடன், வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்களையும், வீட்டில் இருந்த பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்தியதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் உட்பட 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
தீ வைக்கப்பட்டதனால், வான் உட்பட மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளனர். வீட்டில் ஆட்கள் இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டாருக்கு யார் என்று தெரியாத நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
|
|